தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்திலும் நடிக்கவுள்ளார்.

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தமிழ் திரையுலகிற்கு சிறந்த திரைப்படங்களை வழங்கிவரும் நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கடந்த செப்டம்பர் முதல் வருகிற டிசம்பர் வரை மாதம் ஒரு திரைப்படமாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளிவருகின்றன.

முன்னதாக செப்டம்பரில் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் வெளியானது. தொடர்ந்து ஜோதிகாவின் 50வது திரைப்படமாக கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி உடன்பிறப்பே திரைப்படம் வெளியானது. அதன் தொடர்ச்சியாக நவம்பர் 2-ஆம் தேதி தீபாவளி விருந்தாக வருகிறது சூர்யா நடிப்பில் ஜெய் பீம் திரைப்படம்.

இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, லிஜோமொள் ஜோஸ், மணிகண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள ஜெய்பீம் படத்திற்கு S.R.கதிர் ஒளிப்பதிவு செய்ய ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

முன்னதாக வெளியான ஜெய்பீம் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று ஜெய்பீம் படத்தின் முதல் பாடலாக பிரபல பாடகர் தெருக்குரல் அறிவு எழுதி பாடிய பவர் பாடல் வெளியானது. அதிரடியான சூர்யாவின் ஜெய்பீம் பட பவர் பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.