சமூகவலைத்தளங்கள் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒன்றாக மாறிவிட்டது.அதன் மூலம் பல தகவல்களை மக்கள் தெரிந்துகொண்டுள்ளனர்.முக்கிய தேடுதல் தளமாக மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்று கூகுள்.இதன் மூலம் மக்கள் எந்த செய்தியை வேண்டுமானாலும் தெரிந்துகொள்ளலாம்.

இந்த தேடுதல் செயலியின் மூலம் மற்ற செயலிகளுக்கும் செல்ல முடியும்.இதில் திரைப்படங்கள்,ஸ்போர்ட்ஸ் என பல வகையானவற்றை மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.குறிப்பாக லாக்டவுன் நேரத்தில் கடந்த 2 வருடத்தில் பலரும் பல மொழி படங்களை தேடி பார்த்து ரசித்திகிடகி வந்தனர்.

2021 இன்னும் சில நாட்களில் நிறைவுக்கு வரும் வேளையில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தகவல்கள் குறித்த லிஸ்ட்களை வெளியிட்டுள்ளனர்.இதில் இந்திய அளவில் அதிகமாக தேடப்பட்ட திரைப்படங்கள் வரிசையில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் பிடித்துள்ளது.

ஞானவேல் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பல பாராட்டுகளையும் சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.இந்த படம் முதல் இடம் பிடித்திருப்பதை தமிழ் சினிமா ரசிகர்களும் சூர்யா ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.இந்த லிஸ்டில் தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் ஆறாவது இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது