மக்களின் மனதை வென்ற நடிகராகவும் நல்ல தயாரிப்பாளராகவும் தொடர்ந்து சிறந்த படைப்புகளை வழங்கி வரும் நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக இயக்குனர் சதா கொங்காரா இயக்கத்தில்வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரித்து நடித்த சூரரைப்போற்று திரைப்படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் சூரரை போற்று படத்தின் ஹிந்தி வெர்ஷனில் அக்ஷய்குமார் கதாநாயகனாக நடிக்க, முக்கிய வேடத்தில் சூர்யா நடிக்கிறார்.

முன்னதாக சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட 68-வது இந்திய தேசிய திரைப்பட விருதுகளில் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இசையமைப்பாளர் என ஐந்து தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சூரரைப்போற்று திரைப்படத்திலிருந்து இதுவரை வெளிவராத நீக்கப்பட்ட சண்டைக்காட்சி தற்போது வெளியானது. சூரரைப்போற்று திரைப்படத்தின் ஹிந்தி மொழிபெயர்ப்பாக வெளிவந்த உடான் படத்தில் இந்த சண்டைக்காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த சண்டைக் காட்சி இதோ…
 

#SooraraiPottru deleted fight scene. Added in Hindi version Udaan 🔥#VaadiVaasal #EtharkkumThunindhavanpic.twitter.com/kXbKluLCvE

— Suriya Fans Club ™ (@SuriyaFansClub) July 31, 2022