எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன்.இவர் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளளார்.ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றியுள்ளனர்.கமல் போன்ற ஒரு நடிகர் லோகேஷ் போன்ற ஒரு இளம் இயக்குனருடன் இணைவதால் அறிவிப்பு முதலே பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது இந்த படம்.

அந்த எதிர்பார்ப்பை கூட்டும்விதமாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக வர படத்தின் எதிர்பார்ப்பு உச்சம் தொட்டது.இவர்களுடன் நரைன்,அர்ஜுன் தாஸ்,காளிதாஸ் ஜெயராம்,பிக்பாஸ் ஷிவானி,மைனா,மஹேஸ்வரி VJ என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசுக்கு தயாராகி வரும் இந்த படத்தின் எதிர்பார்ப்பை ஏற்றும்படி இந்த படத்தில் சூர்யா ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இவர் இந்த படத்தில் சில காட்சிகளில் தோன்றுவார் என்றும் அந்த காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது என்றும் நம்பத்தக்க வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

சூர்யா கலந்துகொண்ட படப்பிடிப்பில் அவருடன் அர்ஜுன் தாஸ்,ஹரிஷ் உத்தமன்,பாவ கதைகள் ஜாபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டார் என்பது தெரியவந்துள்ளது.கைதி படத்தினை இந்த படத்துடன் கனெக்ட் செய்யும் விதமாக இந்த காட்சி அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஷூட்டிங்கில் கமல் கலந்துகொள்ளவில்லை இருந்தாலும் சூர்யாவை மரியாதை நிமித்தமாக ஷூட்டிங்கில் கமல் சந்தித்துள்ளார் இந்த வீடியோ சூர்யா படத்தில் இருப்பதை உறுதிசெய்துள்ளது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்