எதற்கும் துணிந்தவன் படத்தின் உள்ளம் உருகுதய்யா பாடல் வெளியீடு !
By Aravind Selvam | Galatta | December 27, 2021 18:24 PM IST

தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடித்து அசத்தும் சில நடிகர்களில் ஒருவர் சூர்யா.இவர் நடித்திருந்த ஜெய் பீம் திரைப்படம் சமீபத்தில் நேரடியாக அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியானது.தீபாவளியை ஒட்டி வெளியான இந்த படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனை அடுத்து சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன்,வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகவுள்ள வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார்.வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் சில மாதங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வந்தார் சூர்யா.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்கின்றனர், இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஹீரோயினாக ப்ரியங்கா மோகன் நடிக்கிறார்.சத்யராஜ்,சரண்யா பொன்வண்ணன்,திவ்யா துரைசாமி,இளவரசு,சிபி,சூரி,புகழ்,தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படம் வரும் 2022 பிப்ரவரி 4ஆம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது இதனை தொடர்ந்து இந்த படத்தின் உள்ளம் உருகுதய்யா என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்