சமீபகாலமாக மாணவர்கள் தேர்வு,மதிப்பெண்களுக்கு பயந்து விபரீத முடிவுகளை எடுத்து வருகின்றனர்.பல மாணவர்கள் தங்கள் உயிரையும் துட்சம் என நினைத்து தற்கொலை செய்து வருகின்றனர்.சமீபத்தில் நீட் தேர்வு பயத்தால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வில்லை என பலரும் தெரிவித்துவருகின்றனர்.சில இளம் மாணவர்கள் தங்கள் மனதில் உள்ள பயத்தினால் விபரீத முடிவுகளை எடுக்கின்றனர் அதனை தவிர்த்து தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பேசுங்கள் என்றும் பலரும் தெரிவித்து வளர்கின்றனர்.

இதுகுறித்து தற்போது நடிகர் சூர்யா தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் அதில் அவர் மாணவர்கள் எதை பற்றியும் பயம் இல்லாமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.பரீட்சை உங்கள் உயிரை விட பெரியது அல்ல,மனக்கவலை குழப்பம் இருந்தால் உங்களுக்கு பிடித்தவர்கள் நெருங்கியவர்களிடம் பேசி விடுங்கள் உங்கள் கஷ்டம் குறைந்துவிடும்.

தற்கொலை உங்களுக்கு நெருக்கமானர்வகளுக்கு நீங்கள் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை.நான் எல்லா பரீட்சையிலும் தோல்வியடைந்து, குறைவான மதிப்பெண்களை பெற்றிருக்கிறேன். மதிப்பெண், தேர்வு மட்டும் வாழ்க்கையில்லை. சாதிக்க அத்தனை விஷயங்கள் இருக்கிறது. உங்களை புரிந்துகொள்ள நேசிக்க நிறைய பேர் இருக்கிறார்கள். நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றி பெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.