தான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் திரையுலகின் ஆகச்சிறந்த நடிகராகவும் முன்னணி கதாநாயகனாகவும் வலம் வருபவர் நடிகர் சூர்யா. அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தயாரிப்பில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த தயாரிப்பாளராகவும் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு சிறந்த திரைப்படங்களை வழங்கி வருகிறார்.

அந்தவகையில் இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் நடிக்ர் சூர்யா தயாரித்து நடிக்கும் ஜெய்பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2ம் தேதி தீபாவளி வெளியீடாக நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸ் ஆகிறது. மலை கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ஜெய் பீம் படத்தில் நடிகர் சூர்யா வழக்குரைஞராக நடித்துள்ளார்.

நடிகர் சூர்யாவுடன் இணைந்து லிஜோமொள் ஜோஸ் ராஜிஷா விஜயன் மணிகண்டன் மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். S.R. கதிர் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் தொகுப்பு செய்ய ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இன்று ஜெய் பீம் படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.