தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பல சிறந்த திரைப்படங்களை தயாரித்து வருகிறார் நடிகர் சூர்யா. அந்த வகையில் சூர்யாவின் தயாரிப்பில் அருமையான நான்கு திரைப்படங்கள் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மாதம் ஒரு படமாக அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸாகி வருகின்றன

முதலாவதாக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் வாணிபோஜன் & ரம்யா பாண்டியன் இணைந்து நடித்த ராமே ஆண்டாலும் ராவணனே ஆண்டாலும் கடந்த செப்டம்பரில் ரிலீஸாக,ஆயுத பூஜை வெளியீடாக வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி உடன்பிறப்பே திரைப்படம் ரிலீசாகிறது. அடுத்ததாக அருண் விஜய்யின் ஓ மை டாக் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

முன்னதாக தீபாவளி விருந்தாக ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் 2-ஆம் தேதி ரிலீசாகிறது. இயக்குனர் து.சே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படத்தில் ராஜிஷா விஜயன், லிஜோ மொள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஜெய் பீம் படத்திற்கு S.R.கதிர் ஒளிப்பதிவு செய்ய, ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.விரைவில் ஜெய் பீம் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் முதல் புரோமோ வீடியோ வெளியானது. பரபரப்பான  இந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.