சூர்யா காப்பான் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரரை போற்று திரைப்படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியுள்ளார்.ஒரு நடிகர் என்பதை தாண்டி தனது அகரம் foundatiton மூலம் பல மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.இது மட்டுமின்றி பல தரப்பினருக்கும் தன்னால் முடிந்தளவு உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறார்.

Suriya Cries On Stage Agaram Book Release

நேற்று அகரம் சார்பாக சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தக வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.இதில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

Suriya Cries On Stage Agaram Book Release

Suriya Cries On Stage Agaram Book Release

இந்த விழாவில் பேசிய மாணவி ஒருவர் தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் இன்று அகரம் மூலம் மிகவும் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.இந்த உருக்கமான கதையை கேட்ட சூர்யா மற்றும் அமைச்சர் இருவரும் விழா மேடையிலேயே கண்கலங்கினர்.இதனை தொடர்ந்து பேசிய சூர்யா தன்னை ஒரு நடிகனாக்கி இந்த சமூகம் அழகு பார்த்தது அதனை அழகாக்க தன்னால் முடிந்ததை நல்லுள்ளங்களுடன் சேர்ந்து செய்துவருவதாக கூறினார்.