தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக திகழும் நடிகர் சூர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் பாலா இயக்கத்தில் தற்போது வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து தமிழ் திரை உலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சூர்யா. கலைப்புலி.S.தாணு அவர்கள் தயாரிக்கும் வாடி வாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பும் வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட 68-வது இந்திய தேசிய திரைப்பட விருதுகளில் 5 விருதுகளை பெற்றது. முதல் முறையாக நடிகர் சூர்யா சிறந்த நடிகருக்கான தனது முதல் தேசிய விருதை கைப்பற்றினார்.

இதனிடையே கடந்த 45 நாட்களாக குடும்பத்தோடு அமெரிக்காவில் விடுமுறையை கழித்து வந்த நடிகர் சூர்யா தற்போது அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். நீண்ட நாட்கள் VACATION-ஐ முடித்து சென்னைக்கு திரும்பிய சூர்யா விமான நிலையத்திலிருந்து வெளியேறும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…
 

#RolexSirArrivesChennai 👍😎@Suriya_offl anna arrived Chennai after 46 days. @rajsekarpandian | #Vanangaan#Suriya #Vaadivasal #EtharkkumThunindhavan#Rolex pic.twitter.com/Xp5EEeELaH pic.twitter.com/5urbNUJzKT

— Nithin SFC (@NithinS51554265) July 28, 2022