காப்பான் படத்தை தொடர்ந்து சூர்யா இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.
இதனை தொடர்ந்து ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாகும் அருவா படத்தில் நடிக்கவுள்ளார்.

Suriya Aruva Raashi Khanna Confirmed As Heroine

இந்த படத்தை ஹரி இயக்கவுள்ளார்.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விறுவிறுப்பான ஆக்ஷன் கலந்த குடும்பப்படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

Suriya Aruva Raashi Khanna Confirmed As Heroine

இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரலில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது ஆனால் கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது.இந்த படத்தில் ஹீரோயினாக சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்த ராஷி கண்ணா நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இதனை ட்விட்டரில் ரசிகர்களுடனான கலந்துரையாடலின்போது அவர் உறுதி செய்தார்.

Suriya Aruva Raashi Khanna Confirmed As Heroine

Suriya Aruva Raashi Khanna Confirmed As Heroine

Suriya Aruva Raashi Khanna Confirmed As Heroine