தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடித்து அசத்தும் சில நடிகர்களில் ஒருவர் சூர்யா.இவர் நடித்திருந்த சூரரைப் போற்று திரைப்படம் கொரோனா காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியானது.இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருந்தார்.

தீபாவளியை ஒட்டி வெளியான இந்த படம்  ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து சூர்யா நவரசா என்ற வெப் சீரிஸில் சமீபத்தில் நடித்து வந்தார்.வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகவுள்ள வாடிவாசல் படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார் இந்த படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெகுவிரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் சூர்யா 40 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.இந்த படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் அறிவிப்புக்கு பிறகு அப்டேட் ஏதும் வெளியாகத்தால் , ரசிகர்கள் படக்குழுவினருடன் ஏதேனும் ஒரு அப்டேட் விடுமாறு கேட்டு வந்தனர்.

தற்போது பபுத்தாண்டு தொடங்கியதை ஒட்டி படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என்றும் ஓரிரு கதாபாத்திரங்களுக்கு மட்டும் இன்னும் நடிகர்கள் முடிவாகவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது