காப்பான் படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்துள்ள படம் சுராரைப் போற்று. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிந்தது. அதைத் தொடர்ந்து சூர்யா, ஹரி இயக்கத்தில் சூர்யா 39 படத்தில் நடிக்கவுள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு வெளியான ஆறு படத்தில் இயக்குனர் ஹரியுடன் இணைந்த சூர்யா, அதன் பிறகு வேல், சிங்கம், சிங்கம் 2,3 என வரிசையாக விறுவிறுப்பான படைப்புகளை தந்து அசத்தினர். 

suriya

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவிருந்த இந்த படத்தை தற்போது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக K.E. ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளாராம். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். 2019-ம் ஆண்டு ஸ்டுடியோ க்ரீன் சார்பில் வெளியான மெஹந்தி சர்க்கஸ் மற்றும் மகாமுனி சிறப்பான வரவேற்பை பெற்று திரை விரும்பிகளை ஈர்த்தது. 

studiogreen

தாணு தயாரிப்பில் சூர்யா 40 திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கவிருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் தெரியவந்தது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.