இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர்களுள் ஒருவர் சுரேஷ் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். MS தோனிக்கு பிறகு சென்னை ரசிகர்களால் சின்ன தல என்று அன்போடு அழைக்கப்படுகிறார். சில நாட்கள் முன்பு சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டவர், கொரோனா லாக்டவுன் காரணமாக சொந்த ஊருக்கு விரைந்தார். 

SureshRaina

தனது இன்ஸஸ்டாகிராம் பக்கத்தில் சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்ற முன்பே வா பாடலை டிவியில் பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்திருந்த இந்த படத்தின் பாடல்களை AR ரஹ்மான் இசையமைத்திருப்பார். 

SureshRaina Raina

ஏற்கனவே முன்பே வா பாடலை ரெய்னா பாடி, அந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்க்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. மேலும் தனக்கு பிடித்த தமிழ் நடிகர் சூர்யா என்பதை பல தருணங்களில் சுரேஷ் ரெய்னா பதிவு செய்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.