தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். கைதி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் JD என்னும் காலேஜ் ப்ரொபசர் கதாபாத்திரத்தில் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பவானி என்னும் கதாபாத்திரத்தில் மிரட்டலான வில்லனாக அசத்தியிருந்தார்.

கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், தீனா, மாஸ்டர் பூவையார் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த வருடம் பொங்கல் வெளியீடாக வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் அனைவரையும் குத்தாட்டம் போட வைத்தது. தொடர்ந்து யூட்யூபில் ட்ரெண்டிங்கில் பல சாதனைகள் படைத்து வரும் வாத்தி கம்மிங் பாடல் இந்தியா முழுக்க பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பல முன்னணி பிரபலங்களும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதையும் நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற  விருது விழாவிற்கு வருகை புரிந்த முன்னணி கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் TNPL கிரிக்கெட் போட்டியில் கமெண்டரியில் கலந்து கொண்ட சுரேஷ் ரெய்னா விஜய்யை பாராட்டி பேசியுள்ளார். "எனக்கு மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது." “விஜய் நன்றாக நடித்திருந்தார் நான் மாஸ்டர் படத்தின் ஹிந்தி டப்பிங் வெர்சனை என் மகளோடு சேர்ந்து கண்டு களித்தேன்” என தெரிவித்திருக்கிறார். சுரேஷ் ரீனா தளபதி விஜய் குறித்து பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கை காணலாம்.