இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம நாயகர்களில் ஒருவராகவும் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகராகவும் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்திலும் முக்கியமான கௌரவ வேடத்தில் நடிக்கிறார். 

இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான பாபா திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது. மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் புது பொலிவுடன்  ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு டிசம்பர் மாதம் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் 12ஆம் தேதி ரிலீசாக தயாராகி வருகிறது. ரஜினிகாந்த் அவர்கள் தயாரித்து, கதை, திரைக்கதை எழுதிய பாபா திரைப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். 

முழு படத்தையும் மீண்டும் படத்தொகுப்பு செய்து 3 மணி நேர திரைப்படத்தை இரண்டரை மணி நேர திரைப்படமாக மாற்றி ஃபிரேமுக்கு ஃபிரேம் காட்சிகளை மெருகேற்றி, சவுண்டிலும் 5.1DTSல் இருந்து டால்பிக்கு இணையான மாற்றங்களை செய்து தற்போதைய ரசிகர்கள் விரும்பும் படியாக பாபா திரைப்படம் ரீ-ரிலீஸாக உள்ளது. இதனிடையே நமது கலாட்டா பிளஸ் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பாபா திரைப்படம் குறித்த பல சுவாரசிய தகவல்களை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில், முன்னதாக பாபா திரைப்படத்தின் இறுதியில் “TO BE CONTINUED” என இருப்பதால் பாபா திரைப்படத்தின் இரண்டாவது பாகம் குறித்து நீங்கள் ஏதேனும் திட்டம் வைத்திருந்தீர்களா? இது குறித்து ரஜினிகாந்த் அவர்களுடன் பேசுனீர்களா? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சுரேஷ் கிருஷ்ணா அவர்கள், “அந்த சமயத்தில் ராக்கி போன்ற ஹாலிவுட் திரைப்படங்களின் இரண்டாவது மூன்றாவது பாகங்கள் வந்து கொண்டு இருந்தன. ஆனால் பாபா படத்தில் அப்படி ஒரு காரணத்திற்காக TO BE CONTINUED  என வைக்கவில்லை பாபாவின் பயணம் தொடரும் என சொல்வதற்காகவே வைக்கப்பட்டது. இது முடிவல்ல புதிய பயணம் ஆரம்பம் என சொல்லும் விதமாகவே வைக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார். சுரேஷ் கிருஷ்ணாவின் அந்த முழு பேட்டி இதோ…