வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் சிம்பு நடிக்கிறார் என்று அறிவித்தார்கள். அதன் பிறகு STR படிப்பிடிப்புக்கு வராததால் அவரை படத்திலிருந்து நீக்குவதாக சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். இந்நிலையில் சிம்பு மாநாடு படத்தில் மீண்டும் நடிக்கிறார் என்ற சுவையான செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

manadu

அம்மா உஷா ராஜேந்தர் அளித்த வாக்கை காப்பாற்ற சிம்பு மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக சமீபத்தில் தெரியவந்தது.

manadu

நடிகர் சிம்பு 40 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப தரிசனம் செய்ய மாலை அணிந்து விரதத்தில் உள்ளார். தற்போது கலாட்டா குழுவிற்கு சுரேஷ் காமாட்சி அளித்த பேட்டியில், ஒரு நடிகருக்கு படமே இல்லையென்றாலும் பல ரசிகர்கள் இருப்பது  STR தான். கடைசியா மாலை அணிந்தபோது பார்த்தது. அதன் பிறகு இன்று வரை STR-ரை தொடர்பு கொள்ள முடியவில்லை. படம் செய்ய வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். மீண்டும் மாநாடு படப்பிடிப்பு துவங்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.