தொலைக்காட்சி ரசிகர்களின் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். முன்னதாக 106 நாட்கள் நடைபெற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதனையடுத்து பிக்பாஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது பிக்பாஸ் அல்டிமேட் அறிவிப்பு.

இதுவரை தினசரி ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து ரசித்த ரசிகர்கள் இனிமேல் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் மூலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் ரசிக்க முடியும். இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பிக் பாஸ் தமிழ் சீசன்களில் போட்டியாளர்களாக விளையாடிய நட்சத்திரங்கள் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்களாக களமிறங்கவுள்ளனர். 16 போட்டியாளர்கள் போட்டியிட உள்ள இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக முதல் சீசனின் முக்கிய போட்டியாளர் கவிஞர் சினேகன் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டார்.

இதனையடுத்து முதல் சீசனில் விளையாடிய ஜூலி மற்றும் 3-வது சீசனில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வனிதா விஜயகுமார் ஆகியோர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் விளையாடுவது உறுதியான நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் 4-வது போட்டியாளரை அறிமுகப்படுத்தும் புதிய ப்ரோமோ தற்போது வெளியானது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடிய சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 4வது போட்டியாளராக களமிறங்குகிறார். இதனை உறுதி செய்யும் விதமாக வெளியான பிக்பாஸ் அல்டிமேட்டின் அனல் பறக்கும் புதிய ப்ரோமோ இதோ…