பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களில் ஒருவர் சுரேஷ் சக்ரவர்த்தி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமையல் கலைஞரான சுரேஷ் சக்ரவர்த்தி சக்ஸ் கிட்சன் என்ற சமையல் நிகழ்ச்சிக்கான யூட்யூப் சேனலையும் நடத்தி வருகிறார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தி பல இளம் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விளையாடினார். 

இதனால் தாத்தா தாத்தா என சமூக வலைதளங்களில் பெரும் பிரபலமானார். ஃபினாலே வாரத்தில் மற்ற ஹவுஸ்மேட்ஸ் வந்த போது கூட கடைசி நபராகதான் சுரேஷை ஹவுஸ்மேட்ஸ் பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வந்தனர். தன்னை அழைக்காததை நினைத்து சமூக வலைதள பக்கத்தில் வருத்தப்பட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி.

இந்நிலையில் நேற்றைய ஃபினாலே நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தி, கமலுடன் 5 நாட்கள் ஸ்பெஷல் குக்காக பயணித்த அனுபவத்தை பகிர்ந்தார். இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, சட்டம், ஒப்பந்தங்கள் ஆகியவை சில நேரங்களில் அல்லது பல நேரங்களில் நம்மை மிகவும் காயப்படுத்துகிறது. ஆனால் ஆண்டவர் (கமல் ஹாசன்) போன்ற தூய்மையான ஆன்மாக்கள் இருப்பது நமக்கு நல்ல மருந்தாக உள்ளது.. நன்றி தலைவரே என்று கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், பிக்பாஸ் அக்ரிமென்ட்டை காட்டி விஜய் டிவி உங்களை மிரட்டியதா தாத்தா? என்று கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பார்ட்டிசிபேட் பண்ணுங்கள் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ரசிகர்கள் எதிர்பாத்து போலவே ஆரி தான் டைட்டில் ஜெயித்து இருப்பதாக கமல் அறிவித்து இருக்கிறார்.

மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் பைனலிஸ்ட் ஆக இருந்தனர். அதில் சோம் சேகர் முதலில் வெளியேறினார். அதன் பின் ரம்யா பாண்டியன் மற்றும் ரியோ வெளியேறினர். அதனால் இறுதியில் பாலாஜி மற்றும் ஆரி இருவர் மட்டும் எஞ்சி இருந்தனர்.அவர்கள் இருவரையும் கமல் ஹாசன் தானே பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று வெளியில் அழைத்து வந்தார். கிராண்ட் ஃபினாலே பிரம்மாண்ட மேடைக்கு வந்த பிறகு கமல் ஆரி வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

டைட்டில் ஜெயித்த ஆரி 16 கோடி 50 லட்சம் வாக்குகள் பெற்று இருக்கிறார். இரண்டாம் இடம் பிடித்த பாலாஜிக்கு 6 கோடி 16 லட்சம் வாக்குகள் மட்டுமே கிடைத்து இருக்கிறது. ஆரிக்கு பிக் பாஸ் கோப்பை மற்றும் 50 லட்சம் ருபாய் பரிசாக வழங்கப்பட்டது. ஆரி வெளியில் சென்ற பிறகும் நேர்மையாக பல விஷயங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என கமல் கேட்டுக்கொண்டார்.