தர்பார் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், மீனா, சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். 

Superstars Annaatthe Movie Releasing Pongal 2021

வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது. கொரோனா காரணமாக படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்த முடியாமல் போனது. 

Superstars Annaatthe Movie Releasing Pongal 2021

தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு சன் பிக்சர்ஸ் வாயிலாக வெளியானது. 2021 பொங்கல் தினத்தன்று அண்ணாத்த திரைப்படம் வெளியாகுமாம். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்.