தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.50 வருடங்களுக்கும் மேலாக தனது படங்கள் மூலம் ரசிகர்களை எண்டெர்டைன் செய்து வருகிறார்.இவரது திரைப்படங்கள் வந்தாலே திரையரங்குகள் திருவிழா கோலம் கொள்ளும்.பல வருடங்கள் நடித்து வந்தாலும் தற்போது ஹீரோக்களுக்கு இணையாக இவரது பட வசூல்கள் இருக்கும்.

தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.இவர் நடித்த அண்ணாத்த திரைப்படம் 2021 தீபாவளிக்கு திரைக்கு வந்து சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.இந்த படத்தினை தொடர்ந்து இன்னும் சில படங்கள் ரஜினிகாந்த் நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரஜினி நடிக்கும் அடுத்த படத்தினையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை டாக்டர்,பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக பங்கேற்று வருகிறார் ரஜினி.

இன்று இந்தியா முழுவதும் தீபாவளி திருநாளை பலரும் தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடி வருகின்றனர்.தீபாவளியை முன்னிட்டு ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெறவும்,ஆசி பெறவும் ரசிகர்கள் அவரது வீட்டின் முன் கூடியிருந்தனர்.அவர்களை சந்தித்து கையசைத்து அவர்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.இந்த வீடியோ ரசிர்கர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.