இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மொழியின் திரையுலகிலும் ஒவ்வொரு சூப்பர் ஸ்டார்கள் இருப்பார்கள். ஆனால் ஒட்டுமொத்த இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே.!

சூப்பர்  ஸ்டார் எனும் சிம்மாசனத்தில் பல ஆண்டுகளாக அமர்ந்திருக்கிறார். நேற்று ,இன்று,, நாளை என எந்நாளும் சூப்பர்ஸ்டார் சிம்மாசனம் ரஜினிகாந்துக்கு மட்டுமே சொந்தமானது என பல சூப்பர் ஸ்டார்கள் சொல்லி நாம் கேட்டிருக்கிறோம். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70 வயதைக் கடந்தாலும் ரசிகர்களுக்காக இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறார் கடைசியாக இயக்குனர் ஏஆ.ர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தர்பார்  திரைப்படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் “அண்ணாத்த”  திரைப்படத்தில் நடித்து வருகிறார்

 

தமிழ் சினிமாவில் நெத்தியடி திரைப்படம் மூலமாக நகைச்சுவை நடிகராக அறிமுகமானார் கிங்காங் என அழைக்கப்படும் நடிகர் சங்கர். பிறந்ததிலிருந்தே சிறிய உடல் தோற்றம் உடைய கிங்காங் பல திரைப்படங்களில் பல முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.குறிப்பாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த நகைச்சுவைகள் அனைத்தும் சிரிப்பு வெடிகள் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த அதிசய பிறவி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார் நடிகர் கிங்காங் திரைப்படத்தில் இடம்பெறும் கிங்காங் நடனம் மிகவும் பிரபலமானது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திப்பதற்காக கிங்காங் பல முறை முயற்சி செய்து அது  நிறைவேறாமல் போனது இந்தச் செய்தியை அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் கிங்காங்க்கு போன் செய்து பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய அந்த தொலைபேசி உரையாடல் தற்போது ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.