இயக்குனர் A.R.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த திரைப்படம் தர்பார். காவல்துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை தராவிட்டாலும் ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன்  கைகோர்த்தார் இயக்குனர் சிவா.

சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் பிரமாண்டமாக தயாரிக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் இணைந்து நடிகைகள் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வீரம், வேதாளம் படங்களின் ஒளிப்பதிவாளர் வெற்றியின் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் டி.இமானின் இசையமைப்பில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.  அண்ணாத்த படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குனர் சிவா சூப்பர் ஸ்டாருடன் பணியாற்றுகிறார்.

இந்த வருட தீபாவளி வெளியீடாக வருகிற நவம்பர் 14ஆம் தேதி அண்ணாத்த திரைப்படம் வெளியாகி திரையரங்குகளை திருவிழாவாக மாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பை முடித்து விட்டு மருத்துவ பரிசோதனைக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று திரும்பினார். 

இந்நிலையில் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் நேற்று நடைபெற்ற படப்பிடிப்பின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேரவனில் இருந்து வெளியில் வந்து ரசிகர்களை சந்தித்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.