இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் அடுத்ததாக வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது அண்ணாத்த திரைப்படம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா அண்ணாத்த படத்தை இயக்கியுள்ளார்.

அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து குஷ்பு, மீனா நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ் மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவில் அண்ணாத்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் , இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதாசாஹேப் பால்கே விருது, 67வது இந்திய திரைப்பட தேசிய விருது விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்துடன் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும் ,பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி” என தெரிவித்து பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் ட்ரெண்டாடி வரும் அந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.