இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படங்கள் வெளியாகும் சமயங்களில் ரசிகர்கள் திரையரங்குகளில் தீபாவளி கொண்டாடுவார்கள். அனைத்து தரப்பு மக்களின் மனதையும் கவரும் சூப்பர் ஸ்டார் அடுத்ததாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்க இருக்கிறார்.
 
லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்தடுத்த இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ரஜினிகாந்த் அவர்கள் அதில் முதலாவதாக லால் சலாம் படத்தில் நடிக்கிறார். கிரிக்கெட்டை மையப்படுத்தி ஸ்போர்ட்ஸ் படமாக தயாராகும் லால் சலாம் படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
 
முன்னதாக கோலமாவு கோகிலா , டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தயாராகும் ஜெயிலர் திரைப்படத்தில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். படையப்பா படத்திற்கு பிறகு மீண்டும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினிகாந்த் அவர்களுடன் ஜெயிலர் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனிடையே தமிழகத்தின் முன்னணி பத்திரிகையாளராக பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களை பேட்டி கண்டு மக்களின் கவனத்தை ஈர்த்த ரங்கராஜ் பாண்டே அவர்களின் தந்தை ராம் சிங்காசன் தற்போது காலமானார். இந்நிலையில் ரங்கராஜ் பாண்டேவின் தந்தை மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
 
மேலும் ரங்கராஜ் பாண்டே மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். ரங்கராஜ் பாண்டேவின் தந்தை மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. ரங்கராஜ் பாண்டேவின் தந்தை மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்திய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோ இதோ…
 

பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே இன் தந்தை ராம் சிங்காசன் மறைந்ததை ஒட்டி அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.@rajinikanth @RangarajPandeyR #Rajinikanth #SuperstarRajinikanth #RangarajPandey pic.twitter.com/DusuQ5NOrn

— Galatta Media (@galattadotcom) January 3, 2023