சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரக்டர் பெயர் & ஃபர்ஸ்ட் லுக்...  லால் சலாம் படக்குழு கொடுத்த பக்கா மாஸ் அறிவிப்பு இதோ!

ரஜினிகாந்தின் கேரக்டர் பெயர்-ஃபர்ஸ்ட் லுக் பற்றி லால் சலாம் அறிவிப்பு,rajinikanth character name and first look of lal salaam update | Galatta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படம் வெளியாகும் சமயங்களில் திரையரங்குகளில் திருவிழா கொண்டாடுவார்கள் ரசிகர்கள். அந்த வகையில் தனது திரைப்பயணத்தில் 170-வது திரைப்படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிக்கும் புதிய #தலைவர்170 படத்தில் நடிக்க இருக்கிறார். #தலைவர்170 திரைப்படத்தை ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்குகிறார். உலக அளவில் மிகப்பெரிய பாராட்டுகளையுள் கவனத்தையும் பெற்ற ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் முதல்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்திருக்கும் இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்களின் 171 வது திரைப்படமாக தயாராகும் தலைவர் 171 திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. இது எவ்வளவு தூரம் நிஜம் என்பது குறித்து காத்திருந்து பார்ப்போம்.

முன்னதாக கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார்.  மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன இணைந்து கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் மிக முக்கிய கௌரவ வேடத்தில் நடிக்கிறார். லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் கிரிக்கெட் மற்றும் அதன் பின்னணியில் நடைபெறும் அரசியலை மையமாக வைத்த திரைப்படமாக தயாராகும் லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில், பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு செய்யும் லால் சலாம் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டில் லால் சலாம் திரைப்படத்தின் படப் பூஜை நடைபெற்ற நிலையில் கடந்த (2023) மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த லால் சலாம் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெறுகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது மும்பை சென்று இருக்கிறார். இந்நிலையில் நாளை திங்கட்கிழமை 12AM மணி அளவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கதாபாத்திரத்தின் பெயரையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட உள்ளதாக லால் சலாம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக மும்பைக்கு லால் சலாம் படப்பிடிப்புக்கு செல்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திற்குள் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ மற்றும் லால் சலாம் பட அதிரடி அறிவுப்பு இதோ…
 

தமிழ் நாட்டில் தி கேரளா ஸ்டோரி படத்தின் காட்சிகள் ரத்து... தொடர் போராட்டங்களின் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!
சினிமா

தமிழ் நாட்டில் தி கேரளா ஸ்டோரி படத்தின் காட்சிகள் ரத்து... தொடர் போராட்டங்களின் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் முக்கிய படத்தின் பாடல்களை வெளியிட்ட உலகநாயகன் கமல்ஹாசன்! ட்ரெண்டிங் புகைப்படங்கள் உள்ளே
சினிமா

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் முக்கிய படத்தின் பாடல்களை வெளியிட்ட உலகநாயகன் கமல்ஹாசன்! ட்ரெண்டிங் புகைப்படங்கள் உள்ளே

சினிமா

"பாலாவின் வணங்கான் படத்திலிருந்து வெளியேற காரணம் இதுதான்!"- முதல் முறை மனம் திறந்த க்ரீத்தி ஷெட்டி! வீடியோ இதோ