இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “அண்ணாத்த” திரைப்படத்தின்  படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் தற்போது சென்னை திரும்பியுள்ளார்.

இயக்குனர் சிவாவுடன் முதல் முறையாக இணைந்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அண்ணாத்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் D.இமான் இசையமைக்கிறார். அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து குஷ்பூ ,மீனா ,கீர்த்தி சுரேஷ், நயன்தாரா ,சதீஷ் ,சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, ஜாக்கி ஷெராப் என ஒரு மிகப்பெரிய  நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில் கொரோனாவின் இரண்டாம் அலையால்  இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பாக தொடர்ந்து ஹைதராபாத்தில் நடந்து வந்த படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிக்க வேண்டிய அனைத்து காட்சிகளும் முழுவதுமாக படமாக்கப்பட்டது.

எனவே தனது படப்பிடிப்பை நல்ல முறையில்  முடித்துவிட்டு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடு திரும்பியிருக்கிறார். வீடு திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வாசலில் நிற்க வைத்து திருமதி.லதா ரஜினிகாந்த் அவருக்கு ஆரத்தி எடுக்கும் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.