சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் ரசிகர்கள் திருவிழா கொண்டாட வருகிறது அண்ணாத்த திரைப்படம். முதல் முறையாக இயக்குனர் சிவா சூப்பர் ஸ்டார் கூட்டணியில் மாஸ் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக வருகிறது அண்ணாத்த.

சன் பிக்சர்ஸ்  சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜெகபதிபாபு, பிரகாஷ் ராஜ், ஐக்கி ஷெராப், சூரி, ஜார்ஜ் மரியான், சதீஷ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டாரின் அதிரடியான அண்ணாத்த படத்திற்கு திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். வெற்றி ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்துள்ள அண்ணாத்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். நேற்று வெளியான அண்ணாத்த டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியானது. இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் வெளியாகும் அண்ணாத்த, தெலுங்கில் “பெத்தண்ணா” என்ற பெயரில் வெளியாகிறது. இதனை அறிவிக்கும் விதமாக  தெலுங்கில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மேலும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த, நடிகர் ஜெகபதிபாபு அண்ணாத்த படத்தின் டப்பிங்கை நேற்று நிறைவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.