உலகெங்கும் பல கோடி ரசிகர்களை தன் ஸ்டைலான நடிப்பால் கட்டிப் போட்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சில தினங்களுக்கு முன் லேசான தலைசுற்றல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இதனையடுத்து சிகிச்சை முடிந்து நேற்று இரவு (அக்டோபர் 31) வீடு திரும்பினார்.

முன்னதாக இந்திய திரை உலகின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது சமீபத்தில் நடந்துமுடிந்த 67வது இந்திய திரைப்பட தேசிய விருது விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து புதுடெல்லியில் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருகிற நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் திருவிழாவாக உலகமெங்கும் ரிலீஸாகிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன் தயாரிப்பில், இயக்குனர் சிவா எழுதி இயக்கியுள்ள அண்ணாத்த திரைப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைத்துள்ளார்.

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், சூரி, சத்யன், ரெட்டின் கிங்ஸ்லி, வேல ராமமூர்த்தி என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள அண்ணாத்த படத்திலிருந்து எமோஷனலான வீடியோ சற்று முன் வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.