தாதாசாஹேப் பால்கே விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் ரசிகர்கள் திருவிழா கொண்டாட வருகிறது அண்ணாத்த திரைப்படம். முதல் முறையாக இயக்குனர் சிவா சூப்பர் ஸ்டார் கூட்டணியில் மாஸ் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக வருகிறது அண்ணாத்த.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்  சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜெகபதிபாபு, பிரகாஷ் ராஜ், ஐக்கி ஷெராப், சூரி, ஜார்ஜ் மரியான், சதீஷ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடும் சூப்பர் ஸ்டாரின் அதிரடியான அண்ணாத்த படத்திற்கு திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். வெற்றி ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்துள்ள அண்ணாத்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று அண்ணாத்த படத்தின் புதிய ப்ரோமோ டீசர் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கலக்கலான இந்த ப்ரோமோ டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…