வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் தொலைக்காட்சி விஜய் டிவி.இவர்களது வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கென்றே தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர்களின் நிகழ்ச்சிகளை பார்த்து பல முன்னணி தொலைக்காட்சிகளும் அதையே மீண்டும் தங்கள் சேனலில் ஒளிபரப்புவார்கள்.

அப்படி விஜய் டிவியின் செம ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.சாதாரண மக்களிடம் இருக்கும் பாடும் திறமைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு பெரிய அங்கீகாரம் வாங்கி தரும் ஒரு நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் உள்ளது.இந்த தொடரில் பங்கேற்ற பலரும் பிரபலங்களாக மாறியுள்ளனர்.பலர் பின்னணி பாடகர்களான உயர்ந்துள்ளனர்.

அப்படி சூப்பர் சிங்கரில் பங்கேற்று தமிழ் சினிமாவில் பாடல்கள் பாடி அசத்தியவர் மாளவிகா சுந்தர்.மனம் கொத்தி பறவை,ஜாக்பாட்,கடவுள் இருக்கான் குமாரு,பென்சில் உள்ளிட்ட பல படஙக்ளில் சூப்பர்ஹிட் பாடல்களை பாடி அசத்தியுள்ளார் மாளவிகா.

தனக்கு அஷ்வின் காஷியூப் ரகுமாரன் என்பவருடன் திருமணம் நடக்கப்போவதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தார் மாளவிகா.தற்போது இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.