வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் தொலைக்காட்சி விஜய் டிவி.இவர்களது வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கென்றே தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர்களின் நிகழ்ச்சிகளை பார்த்து பல முன்னணி தொலைக்காட்சிகளும் அதையே மீண்டும் தங்கள் சேனலில் ஒளிபரப்புவார்கள்.

அப்படி விஜய் டிவியின் செம ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.சாதாரண மக்களிடம் இருக்கும் பாடும் திறமைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு பெரிய அங்கீகாரம் வாங்கி தரும் ஒரு நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் உள்ளது.இந்த தொடரில் பங்கேற்ற பலரும் பிரபலங்களாக மாறியுள்ளனர்.பலர் பின்னணி பாடகர்களான உயர்ந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பலரும் பிரபலங்களாக மாறியுள்ளனர்.இந்த தொடரின் துவக்கத்தில் தனது பேண்ட் மூலம் இந்த நிகழ்ச்சிக்கு தேவையான இசையை வழங்கியவர் பாலாஜி ஆராதனா.இதனை தவிர பல இசைநிகழ்ச்சிகளுக்கும் இவரது பேண்ட் வாசித்துள்ளனர்.

இவர் இன்று காலை காலமானார் என்ற துக்க செய்தியை பல விஜய் டிவி மற்றும் சூப்பர் சிங்கர் பிரபலங்கள் பகிர்ந்து வருகின்றனர்.அவரது ஆத்மா சாந்தி அடைய பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

A post shared by Raghavendran Puli (@raghavendranpuli_official)