தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குநர் தியாகராஜ குமாரராஜா. இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி சீராக ஓடிய படம் சூப்பர் டீலக்ஸ். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருப்பார். ஃபஹத் ஃபாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின், அஸ்வந்த் என பலர் நடித்திருந்தனர். 

Super Delux Movie Original Sound Track Update

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்த்தது. இந்த உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு நல்லது கெட்டதுக்கும் தொடர்பு உள்ளது என்பது தான் சூப்பர் டீலக்ஸின் கதை. இது போன்ற படம் வெளியாக இன்னும் பல நாட்கள் ஆகும். 

Super Delux Movie Original Sound Track Update

தற்போது இப்படத்தின் OST எனப்படும் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் யுவன் ரசிகர்கள். லாக்டவுன் நேரத்தில் நிச்சயம் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.