பாலிவுட் சினிமாக்களில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை சன்னி லியோன். உலகளவில் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். 2012-ல் ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானவர் ராகினி MMS படத்தில் பிரபலமானார். தமிழில் வடகறி, மதுரராஜா போன்ற படங்களின் பாடலுக்கு நடனமாடினார். 

sunnyleone

இவரது வாழ்வை தழுவி டாக்யுமெண்டரியும், இணைய தொடரும் உருவாக்கப் பட்டுள்ளது. சர்வதேச அளவில் அறியப்படும் இவர் டேனியல் வெப்பர் என்ற இசை கலைஞரை திருமணம் செய்தார். ஊரடங்கு நேரத்தில் படப்பிடிப்பு இல்லாத திரைப்பிரபலங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து வருகின்றனர். 

sunnyleone

இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சன்னிலியோன், வீட்டிற்குள் கணவர் வெப்பர் செய்யும் விஷயங்களை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பது போல் காட்டிக்கொள்ளும் வெப்பர் வீட்டிற்குள் சோம்பேறித்தனமாக இருக்கிறார் என்பதை சன்னி லியோன் வீடியோ வாயிலாக கூறியுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Here you go guys... the truth!! @dirrty99 lounging around and resting!!

A post shared by Sunny Leone (@sunnyleone) on