உலகப் புகழ் பெற்ற கவர்ச்சி நடிகைகளில் ஒருவரான நடிகை சன்னிலியோன் சில ஆண்டுகளாக இந்திய சினிமாவில் களம் இறங்கி பாலிவுட்டில் பல திரைப் படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம்மாடி ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து இருந்தார். தமிழில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்த வடகறி திரைப்படத்தில் இடம்பெற்ற குத்துப்பாடலுக்கு நடனம் ஆடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது சன்னி லியோன் கதாநாயகியாக நடித்திருக்கும் புதிய தமிழ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.தமிழ் ஹிந்தி தெலுங்கு மலையாளம் என 4 மொழிகளில் இத்திரைப்படம் தயாராகிறது த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் ஷெரோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இக்கிகை மோஷன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அன்சாரி நெக்ஸ்டல் மற்றும் ரவிக்கிரன் இணைந்து தயாரிக்கும் ஷெரோ எனும் புதிய திரைப்படத்தில் நடிகை சன்னிலியோன் கதாநாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன் எழுதி இயக்குகிறார். 

முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைப்பில் ஒளிப்பதிவாளர் மனோஜ் குமார் கடோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடிகை சன்னி லியோனின் வெறித்தனமான இந்த ஷெரோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது அந்த ஃபர்ஸ்ட் லுக்கை கீழே உள்ள லிங்கில் காணலாம்.