உலக புகழ்பெற்ற கவர்ச்சி நடிகையான நடிகை சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் பல படங்களுக்கு குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்டும் வருகிறார். தமிழில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்த வடகறி திரைப்படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடினார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வெளிவரவுள்ள ஷெரோ திரைப்படத்திலும் நடிகை சன்னி லியோன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக மீண்டும் ஒரு புதிய தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஓ மை கோஸ்ட் என பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை VAU மீடியா என்டர்டெய்ன்மன்ட் சார்பில் திரு.வீரசக்தி மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோ சார்பில்  திரு.K.சசிகுமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

நகைச்சுவையான திகில் திரைப்படமாக தயாராகி வரும் ஓ மை கோஸ்ட் படத்தில் நடிகை சன்னிலியோன் கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் குக் வித் கோமாளி பிரபலமான நடிகை தர்ஷா குப்தா, நடிகர் சதீஷ்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன் ஆகியோருடன் இணைந்து டிக் டாக் பிரபலமான G.P.முத்துவும் நடிக்கிறார். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் தயாராகும் இத்திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்குகிறார். இசையமைப்பாளர் ஜாவித் இசையமைக்கிறார். இந்நிலையில் ஓ மை கோஸ்ட் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட சன்னி லியோன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு இதை உறுதிப்படுத்தியுள்ளார்.