கடந்த 2013-ம் ஆண்டு வெளியான யாருடா மகேஷ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் நடிகர் சந்தீப் கிஷன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் சந்தீப். அதைத்தொடர்ந்து நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், நரகாசூரன் போன்ற படங்களில் நடித்தார். 

Sundeep Kishan Reduces 12 kgs During Corona Lockdown

2019-ம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பில் தமிழில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் நட்பே துணை. தற்போது இதன் தெலுங்கு ரீமேக்கிற்கு தயாராகி வருகிறார் சந்தீப் கிஷன். ஹாக்கி விளையாட்டு பற்றியும் அதில் நடக்கும் மைதான அரசியல் பற்றியும் பேசும் படமாகும். 

Sundeep Kishan Reduces 12 kgs During Corona Lockdown

தெலுங்கில் A1 எக்ஸ்பிரஸ் என உருவாகும் இந்த படத்திற்காக, தனது உடல் எடையை சுமார் 12 கிலோ வரை குறைத்துள்ளார். சந்தீப் கிஷனின் இந்த மாற்றத்தை ரசிகர்கள் தவிர்த்து திரைப்பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். டென்னிஸ் ஜீவன் இயக்கும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார்.