ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிப்பில் வி.சி.துரை இயக்கத்தில் உருவாகி வரும் திகில் திரைப்படம் இருட்டு. இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது.

sundarc

திகில் கலந்த காமெடி படமான அரண்மனையின் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியுள்ள சுந்தர்.சி, இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தில் தன்ஷிகா, சாக்சி பர்வீந்தர், வி.டி.வி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள்.

sundarc

படத்தின் 85% படப்பிடிப்பு ஒரே கட்டமாக ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ள நிலையில், சில காட்சிகள் ஐதராபாத் மற்றும் சூரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பை கவனிக்கிறார். தற்போது இப்படம் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகும் என்ற செய்தி வெளியானது.