கடந்த 2002-ம் ஆண்டு வெளியான படம் சுந்தரா டிராவல்ஸ். நடிகர் முரளி, வைகைப் புயல் வடிவேலு ஆகியோர் நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கும் இந்த படம். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ராதா. இவருக்கு பட வாய்ப்புகள் அமையாததால், அடுத்தடுத்து அவரைப் படங்களில் பார்க்க முடியவில்லை. படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும் இவரது பெயர் அடிக்கடி ஊடங்களில் அடிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

நடிகை ராதாவுக்கு ஏற்கனவே தயாரிப்பாளருடன் திருமணமாகி குழந்தை உள்ளது. தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமான கணவரை விவகாரத்து செய்து விட்டு நடிகை ராதா தனியாக வாழ்த்து வந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜா என்பவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

வசந்தராஜா எண்ணூர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தை உள்ள நிலையில், நடிகை ராதாவை திருமணம் செய்து கொண்டு சாலிகிராமத்தில் ஒன்றாக வாழ்த்து வருகின்றனர்.

இந்நிலையில், வசந்தராஜா தன்னை அடித்து துன்புறுத்துவாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் நடிகை ராதா அளித்துள்ளார் . 

அதில், நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாகவும், ஹைதராபாத்தில் இருந்து வந்த என் தாயையும் அடிக்க முயற்சி செய்ததாகவும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் எஸ்.ஐ வசந்தராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.