தமிழ் திரையுலகில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே அமைத்திருக்கும் மாபெரும் வெற்றிப்பட இயக்குனர் சுந்தர்.சி.  மாஸ் , கமர்சியல், நகைச்சுவை, ஹாரர் காமெடி என அனைத்து ஏரியாக்களிலும் சிறந்த என்டர்டைன்மென்ட் திரைப்படங்களை மக்களுக்கு வழங்கி வரும் இயக்குனர் சுந்தர்.சி-யின் அரண்மனை சீரிஸ் படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

முன்னதாக வெளியான அரண்மனை 1 மற்றும் 2 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற நிலையில் தற்போது பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது அரண்மனை 3. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை எனும் வெற்றி படத்தை கொடுத்த நடிகர் ஆர்யா அரண்மனை 3 திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இயக்குனர் சுந்தர்.சி, ஆண்ட்ரியா, யோகி பாபு, மனோபாலா, வின்சென்ட் அசோகன், சாக்ஷி அகர்வால் மற்றும் இவருடன் இணைந்து மறைந்த நகைச்சுவை நடிகர் சின்ன கலைவாணர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவ்னி சினிமேக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா தயாரித்துள்ள அரண்மனை3 படத்திற்கு யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இசையமைப்பாளர் சத்யா.சி இசையமைத்துள்ள அரண்மனை 3 படத்திலிருந்து இரண்டாவது பாடல் இன்று வெளியானது. பிரபல பாடகர் சிட் ஸ்ரீராம் குரலில் வெளியாகியிருக்கும் ரசவாச்சியே என்னும் அழகான பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.