தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் சுந்தர்.C , தமிழ் சினிமா ரசிகர்களின் மிகவும் அபிமானமான இயக்குனர்களில் ஒருவர். சுந்தர்.C.-ன் மாஸ்-கமர்ஷியல்-காமெடி திரைப்படங்களுக்கு என்று எப்போதும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. குறிப்பாக சுந்தர்.C-யின் அரண்மனை சீரிஸ் திரைப்படங்களும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அந்த வகையில் ஆயுதபூஜை வெளியீடாக வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் அரண்மனை-3 படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் இயக்குனர் சுந்தர்.C, ஆர்யா, ஆண்ட்ரியா & ராஷி கண்ணா நடிக்க, யோகிபாபு, விவேக், மைனா நந்தினி, மனோபாலா, நளினி, சாக்ஷி அகர்வால், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

நடிகை குஷ்புவின் ஆவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில், இசையமைப்பாளர் C.சத்யா இசையில், U.K.செந்தில் குமார் ஒளிப்பதிவில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் அரண்மனை-3 படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது.முன்னதாக வெளியான அரண்மனை-3 ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது அரண்மனை-3 படத்திலிருந்து 5-வது பாடல் வெளியானது. C.சத்யா இசையில், இந்திய திரையுலகின் முன்னணி பாடகர்களான ஹரிஹரன் மற்றும் சங்கர் மகாதேவன் இணைந்து பாடியிருக்கும் தீயாக தோன்றி எனும் இப்பாடலைக் கீழே உள்ள லிங்கில் காணலாம்.