தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதனைத் தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். வெகு நாட்களுக்கு பிறகு அட்லீ இயக்கிய தெறி படத்தில் கௌரவ ரோலில் நடித்தார். 

கடந்த 2019-ம் ஆண்டில் எனை நோக்கி பாயும் தோட்டா, சில்லுக்கருப்பட்டி போன்ற படங்கள் வெளியாகி அசத்தின. தற்போது யோகிபாபு நடிக்கும் ட்ரிப் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். நடிகை சுனைனா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ட்ரிப். டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் இந்த படத்தில் கருணாகரண் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். 

த்ரில்லர் கலந்த நகைச்சுவை படமாக இந்த படம் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதயஷங்கர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். அடர்ந்த காட்டில் மாட்டுக்கொள்ளும் மனிதர்கள் எப்படி தப்பித்து வருகிறார்கள் என்பதே இதன் கதைக்கரு. 

இந்த படத்தின் முதல் சிங்கிள் What a life பாடல் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் நடிகர் யோகி பாபு. இவரது பெயர் இல்லாமல் திரைப்படங்கள் வெளியாவதே இல்லை என்றும் கூறலாம். 

சின்னத்திரை மூலம் அறிமுகமான இவர், தனது அயராத உழைப்பினால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பிரபலமாக மாறியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ட்ரிப் படத்தை காண ஆவலில் உள்ளனர் ரசிகர்கள். யோகிபாபு கைவசம் வலிமை, அயலான், டாக்டர், கடைசி விவாசாயி, கர்ணன் போன்ற படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது. காக்டெயில் மற்றும் மண்டேலா படத்தின் ஹீரோவாக நடித்துள்ளார் யோகிபாபு.