தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.

சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்கு என்றும் தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது அனைவரும் அறிந்ததே.கொரோனவை அடுத்து சில தொடர்கள் கைவிடப்பட்டன சில தொடர்கள் புதிதாக இணைக்கப்பட்டன அப்படியும் சன் டிவி சீரியல்களுக்கான மவுசு ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் விறுவிறுப்பான தொடர்களில் ஒன்று நிலா.கடந்த 2019 முதல் இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.400க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் நல்ல வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்தது.

இந்த தொடரின் நாயகியாக பவித்ரா நடித்துள்ளார்.விறுவிறுப்பான கட்டத்தில் நகர்ந்து வரும் இந்த தொடர் வரும் சனிக்கிழமை தனது கடைசி எபிசோடை ஒளிபரப்பு செய்து நிறைவு செய்யும் என்ற தகவல் கிடைத்துள்ளது.இதனை அடுத்து இந்த தொடரின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.