தமிழின் பிரபல மியூசிக் சேனல்களில் ஒன்று சன் டிவி நிறுவனத்தின் சன் மியூசிக்.அஞ்சனா,மணிமேகலை,தியா,சங்கீதா,ரியோ,சுரேஷ் என்று சின்னத்திரையில் ஜொலித்து வரும் பலரும் இந்த சேனலில் ஒரு பெரிய பங்காற்றியுள்ளனர்.கடந்த சில வருடங்களாக சன் மியூசிக்கை கலக்கி வந்த ஒருவர் VJ அக்ஷயா.

தனது பேச்சாலும்,அழகாலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை இவர் வெகு விரைவில் கைப்பற்றினார்.இவருக்கென்று பல ரசிகர் பக்கங்கள்,போட்டோ வீடியோ எடிட்கள் என்று ரசிகர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.ஹிட்லிஸ்ட்,செம மார்னிங்,நோ ப்ராப்லம் உள்ளிட்ட சூப்பர்ஹிட் ஷோக்களை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கி இருக்கிறார்.இவரது திருமணம் 2020 செப்டம்பரில் நடைபெற்றது.இதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகப்பெரிய ஹிட் தொடர்களில் ஒன்றான ரோஜா தொடரில் இணைந்தார். இந்த தொடரில் நடித்து வந்த ஷாமிலிக்கு பதிலாக VJ அக்ஷயா இணைந்தார்.

சில மாதங்களுக்கு முன் இணைந்தாலும் ரசிகர்களிடம் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.தற்போது தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் தனிமைப்படுத்திக்கொண்டு தேவையான சிகிச்சை எடுத்துவருவதாகவும் விரைவில் மீண்டு வருவேன் என்றும் தெரிவித்துள்ளார் அக்ஷயா.