சிவகார்த்திகேனின் ‘மாவீரன்’ படத்தை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம் .. - அட்டகாசமான வீடியோவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு.. விவரம் உள்ளே..

மாவீரன் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் விவரம் உள்ளே – Maaveeran satellite rights bagged by sun network | Galatta

‘டாக்டர்’, ‘டான்’ என இரண்டு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்து தமிழ் சினிமாவில் கலெக்ஷன் அள்ளும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இணைந்துள்ளவர் சிவகார்த்திகேயன். அதன்பின் அவர் நடிப்பில் ‘பிரின்ஸ்’ படம் வெளியானது . படம் நினைத்த அளவு  சரியாக ஓடவில்லை என்றாலும் அடுத்தடுத்த சிவகார்த்திகேயன் கையிருப்பில் இருக்கும் படங்கள் பெரியது.  யோகி பாபு நடித்து மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்ற ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’, ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிச்சங்கர் இயக்கத்தில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் ‘அயலான்’ மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன் தயாரிப்பில் ‘SK 24’ என்று வரிசையாய் எதிர்பார்ப்பை எகிரவைக்கும் திரைப்படங்களில் தற்போது சிவகார்த்திகேயன் பணியாற்றி வருகிறார்.

அதில் தற்போது சிவகார்த்திகேயன் முழு வீச்சுடன் நடித்து வரும் திரைப்படம் ‘மாவீரன் சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் மடோன் அஷ்வின் இயக்கி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கின்றார் இவர்களுடன் இணைந்து படத்தில் சரிதா, இயக்குனர் மிஷ்கின், பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் டைட்டில் வெளியீடு அட்டகாசமான முன்னோட்டத்துடன் வெளியானது. மேலும் படத்தில் பரத் சங்கர் இசையில் முன்னதாக வெளியான ‘சீனா சீனா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இறுதி கட்ட படபிடிப்பில் இருக்கும் மாவீரன் படத்தின் அட்டகாசமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி மாவீரன் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து அட்டகாசமான மோஷன் போஸ்டருடன் சன்டிவி யின் டிரேட் மார்க் ஒலிவடிவமான ‘உங்கள் சன்டீவியில்.. என்ற ஒலியுடன் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

We are Elated to announce that @SunTV is our satellite partner for #Maaveeran/#Mahaveerudu 😊📺@Siva_Kartikeyan #MaaveeranOnSunTv #VeerameJeyam @madonneashwin @AditiShankarofl @DirectorMysskin @iamarunviswa @iYogiBabu @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 pic.twitter.com/MFwXqrZACI

— Shanthi Talkies (@ShanthiTalkies) March 11, 2023

முன்னதாக படத்தின்  டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. மாவீரன் திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் குவிந்து வரும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு அதனை கொண்டாடி வருகின்றனர். 

“என் இனிய நண்பர்” முதல்வர் குறித்து சுவாரஸ்யமான பேச்சு.. - புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..
சினிமா

“என் இனிய நண்பர்” முதல்வர் குறித்து சுவாரஸ்யமான பேச்சு.. - புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..

‘அசுரன்’ சிவசாமி கெட்டப்பில் ‘அட்டகத்தி’ தினேஷ் – வைரலாகும் பா ரஞ்சித் தயாரிக்கும் தண்டகாரண்யம் படத்தின் Glimpse இதோ..
சினிமா

‘அசுரன்’ சிவசாமி கெட்டப்பில் ‘அட்டகத்தி’ தினேஷ் – வைரலாகும் பா ரஞ்சித் தயாரிக்கும் தண்டகாரண்யம் படத்தின் Glimpse இதோ..

'பிச்சைக்காரன் 2' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் புதிய படம் ரிலீஸ் தேதி அப்டேட்.. - வைரலாகும் அட்டகாசமான போஸ்டர் இதோ..
சினிமா

'பிச்சைக்காரன் 2' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் புதிய படம் ரிலீஸ் தேதி அப்டேட்.. - வைரலாகும் அட்டகாசமான போஸ்டர் இதோ..