தமிழ் தொலைக்காட்சிகளில் பல ஆண்டுகளாக முன்னணி நிறுவனமாக இருந்து வருவது சன் டிவி.தங்கள் சீரியல்கள் மூலமாகவும்,வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும் ரசிகர்களை கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக என்டேர்டைன் செய்து வருகிறது சன் டிவி.

குறிப்பாக பலரையும் கவரும்படி நெடுந்தொடர்களை ஒளிபரப்புவதில் சன் டிவிக்கு நிகர் எவரும் இல்லை.TRPயிலும் பல முன்னணி தொடர்கள் கலக்கி வருகின்றன.ட்ரெண்ட்டிற்கு ஏற்றவாறு புதிய சீரியல்களையும் ஒளிபரப்பி அசத்துவார்கள் சன் டிவி.சன் டிவியில் சமீபத்தில் ஒளிப்பரப்பை தொடங்கி அசத்தி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று தாலாட்டு.

கிருஷ்ணா,ஸ்ருதிராஜ் முன்னணி வேடங்களில் நடித்து அசத்தி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த தொடரை Shak ஸ்டுடியோஸ் தயாரித்து வருகின்றனர்.தற்போது சன் டிவியில் இதே தயாரிப்பு நிறுவனம் மற்றுமொரு தொடரை தயாரித்துள்ளனர்.அருவி என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரின் அறிவிப்பு ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பூவே பூச்சூடவா தொடரில் நடித்த கார்த்திக் வாசு இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கிறார்.பூவே உனக்காக தொடரில் நடித்து பிரபலமான ஜோவிதா லிவிங்ஸ்டன் இந்த தொடரில் ஹீரோயினாக நடிக்கிறார்.அம்பிகா இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த அறிவிப்பு ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்