சுல்தான் படத்தின் ரொமான்டிக் பாடல் வீடியோ ப்ரோமோ இதோ !
By Aravind Selvam | Galatta | April 04, 2021 13:17 PM IST

கதைதேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கைதி,தம்பி திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து கார்த்தி மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன்,ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
கொரோனா காரணமாக இரண்டு படங்களின் ஷூட்டிங்குமே தடைபட்டது.கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு சுல்தான் படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டது.இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
சுல்தான் படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர்.
இந்த படம் ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் சூப்பர்ஹிட் ரொமான்டிக் பாடலான யாரையும் இவளோ அழகா பார்க்கல என்ற பாடலின் வீடீயோவை நாளை வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இந்த பாடலின் வீடியோ ப்ரோமோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.