இந்திய திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் மாதவன் நடித்து வெளிவந்த இறுதிச்சுற்று திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இத்திரைப்படம் தெலுங்கில் குரு என நடிகர் வெங்கடேஷ் நடிக்க ரீமேக் செய்யப்பட்டது.

இதனையடுத்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் முதல் முறை சூர்யா கதாநாயகனாக நடித்த சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகி ஏகோபித்த வரவேற்பை பெற்றது. கேப்டன் G.R.கோபிநாத் அவர்களின் சிம்பிளி ஃப்லை எ டெக்கான் ஒடிஸி எனும் புத்தகத்தை தழுவி கேப்டன் G.R.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்திய படமாக சூரரைப்போற்று தயாரானது.

சூர்யா & அபர்ணா பாலமுரளி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா தயாரிக்க, GV பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். தற்போது சூரரைப்போற்று திரைப்படம் பாலிவுட்டில் அக்ஷய்குமார் கதாநாயகனாக நடிக்க ரீமேக் செய்யப்படுகிறது. சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கில் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதனிடையே சில தினங்களுக்கு முன்பு 68வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த திரைக்கதை என 5 தேசிய விருதுகள் கிடைத்தது. இந்நிலையில் சூரரைப்போற்று படத்திற்காக கிடைத்த 5 தேசிய விருதுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இயக்குனர் சுதா கொங்கரா தற்போது நன்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சுதா கொங்கராவின் நன்றி அறிக்கை இதோ…
 

For the loved ones on land and in the skies...heartfelt thanks.#SooraraiPottru @Suriya_offl @gvprakash @Aparnabala2 @rajsekarpandian @2D_ENTPVTLTD @nikethbommi @jacki_art @editorsuriya @PoornimaRamasw1 @deepakbhojraj @valentino_suren @gopiprasannaa pic.twitter.com/QPaI8A2n9l

— Sudha Kongara (@Sudha_Kongara) July 26, 2022