பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இதில் 16 போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைத்து உள்ளே அனுப்பி வைத்தார் நடிகர் கமல்ஹாசன். அதன்பிறகு பிரபல விஜேவான அர்ச்சனா வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். இந்நிலையில் கடந்த வார இறுதியில் பிக்பாஸ் போட்டியாளரான ரேகா பிக்பாஸ் வீட்டிலிருந்து எவிக்ட்டானார். இதனை தொடர்ந்து மேலும் ஒரு பிரபலத்தை பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக கொண்டு வர பிக்பாஸ் நிகழ்ச்சி குழு முடிவு செய்துள்ளது.

இந்த சீசனில் வரும்  டாஸ்க்குகள் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. பட்டிமன்றம் என பட்டாசு போல் வெடித்தனர் பிக்பாஸ் வீட்டினர். மியூஸிக்கல் சேர் போட்டியில் வேல்முருகன் கண்ணை கட்டிக்கொண்டு பாட, மற்றவர்கள் ஆனந்தமாக விளையாடினர். யார் கையில் அந்த பாக்ஸ் வரும்போது பாட்டு நிற்கிறதோ அவர் எழுந்து யாராவது ஒருவரை அழைத்து ஏதாவது செய்ய சொல்ல வேண்டும் என்பது தான் போட்டியின் விதிமுறையாக இருந்தது. இதில் முதலில் அவுட் ஆனவர் சனம் ஷெட்டி. இதையடுத்து வெளியே வந்த அவர் பாலாஜியை அழைத்து எனக்கும், உனக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தமாக இருக்கிறது அதனால் என்னை புகழ்ந்து 10 பாயிண்ட் சொல்லு என்றார்.

இந்நிலையில் சுசித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் கௌதம் வாசுதேவ் மேனன் ரசிகர்களிடம் அவர் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். நாம் அனைவரும் GVMarmy என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்வோம். அவரை சீக்கிரமா பிக்பாஸ் தமிழில் ஒரு போட்டியாளராக பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசை என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் சுசித்ராவின் பதிவு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது. மேலும் கூறுகையில் நான் எப்போதுமே கௌதம் மேனனின் தீவிர ரசிகை. நான் பிக்பாஸ் உள்ளே செல்லாவிட்டாலும், அவர்  செல்ல வேண்டும். அங்கேயும் சிறந்த கண்டென்ட்டுகளை கண்டெடுப்பார் என்று கூறியுள்ளார்.

காஃபி, புத்தகம், கிட்டார், அழகான குடும்பம், அன்பான வார்த்தைகள், அண்ணா நகர் நண்பர்கள், லாஜிக்கான ஹீரோயிசம், உணர்வுபூர்வ உரையாடல், மைன்ட் வாய்ஸ் வசனங்கள் மற்றும் ஸ்டஃப்ஸ் இவையனைத்தும் ஓர் படத்தில் கொண்டு வர கௌதம் மேனனால் மட்டுமே முடியும் என்பதை தன் ஒவ்வொரு படங்களின் மூலம் நிரூபிக்கிறார். 

இந்த லாக்டவுனிலும் பிஸியாக காணப்படும் கெளதம் மேனன், ஒன்றாக என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம், ஒரு ஒரு சான்ஸ் குடு பாடல் ஆகியவற்றை இயக்கினார். கிளாஸ் நிறைந்த இந்த இரண்டு படைப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. 

சமீபத்தில் புத்தம் புது காலை எனும் ஆந்தாலஜி படத்தில் அவரும் நானும்-அவளும் நானும் எனும் பகுதியை இயக்கியிருந்தார். இதில் ரிது வர்மா மற்றும் எம்.எஸ். பாஸ்கர் நடித்தனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்த இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். ஆண்டனி எடிட்டிங் செய்தார். இதன் பிறகு வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் குட்டி லவ் ஸ்டோரி ஆந்தாலஜியையும் இயக்கி வருகிறார்.