“ஒரு ஆளுக்கு அடிபட்டுதான் 100 நாள் படம் ஓடனும்னு அவசியம் இல்ல' - துணிவு படப்பிடிப்பில் டென்ஷன் ஆன அஜித்..

துணிவு பட சண்டை காட்சிகள் குறித்து சுப்ரீம் சுந்தர் மற்றும் குழுவினர் - Stunt master supreme sundar about the Ajith thunivu fight sequences | Galatta

இந்த ஆண்டில் மிகப்பெரிய படமாக வெளிவந்து மக்களின் பேராதாரவை பெற்ற படம் ‘துணிவு. அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கிய துணிவு படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று உலகளவில் வசூல் குவித்து வருகிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் பிரமாண்ட பொருட்செலவில் வங்கி கொள்ளையை மையமாக எடுக்கப்பட்ட இந்த படம் அனைத்துதரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது இந்நிலையில், நமது கலாட்டா தமிழ் பேட்டியில் துணிவு படத்தில் சண்டை வடிவமைத்த சுப்ரீம் சுந்தர் மற்றும் அவரது குழுவினருடன் கலந்து கொண்டார். இதில் துணிவு படத்தில் அமைந்துள்ள சிறப்பு சண்டை காட்சிகள் குறித்தும் அஜித் உடன் பணியாற்றிய அனுபவும் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

இதில் சுப்ரீம் சுந்தர், "படப்படிப்பில் 13 டேக் வரைக்கும் கீழ விழுந்து விழுந்து ஸ்டண்ட்மேனுக்கு (பாலாஜி) அடிபட்டது.  7 வது டேக்கிலே அவருக்கு கை இறங்கியது. அதுபற்றி சாரிடம் அப்போது சொல்ல முடியவில்லை. அந்த ஷாட் முடிஞ்சதும் தான் சாரிடம் சொன்னோம். அவர் ரொம்ப டென்ஷனாகிட்டாரு. இப்படி ஒரு ஸ்டண்ட் மேன் அடிபட்டு தான் படம் நூறு நாள் ஒடனும்னு தேவையில்லை னு சொன்னார். அவர் ஒரு ஸ்டண்ட் மேன் க்கு அடிபட்டாலே தாங்க மாட்டாரு..” என்று சண்டை வடிவமைப்பாளர் சுப்ரீம் சுந்தர் குறிப்பிட்டார்.

அதன்பின் துணிவு படப்பிடிப்பில் அடிப்பட்ட ஸ்டண்ட் மேன் மற்றும் திருநங்கை கதாபாத்திரம் ஏற்று நடித்த பாலாஜி அவர் இதுகுறித்து பேசினார்,

"எல்லாமே அஜித் சாருக்காகவும் சுந்தர் மாஸ்டருக்காகவும் தான்.‌அந்த ஷாட் முடிஞ்சாதான் நமக்கு திருப்தியாகும் அதனால தான் அவ்ளோ ரிஸ்க் எடுத்து பண்ணேன். அடிப்பட்டத்தற்கு பின்பு அஜித் சார் நல்லா திட்டுனாரு. வேறு ஆளு மாற்றிக்கொள்ளலாம் என்று சொன்னாரு.. நான் முன்னாடி திருநங்கை கதாபாத்திரம் செய்தேன் இருந்தாலும் எனக்கு சார் கிட்ட ஒரு அடி வாங்கிடனும் அப்போதான் எனக்கு முழுமையா இருக்கும். நான் அந்த காட்சியை விருப்பப்பட்டு பண்ணேன்.” என்றார்.

மேலும் படத்தில் அதிகம் பேசப்பட்ட பாராட்டப்பட்ட  300 டிகிரி ஷாட் குறித்து குழுவினரிடம்  பேசுகையில்,

"300 டிகிரி ஷாட் எடுக்கும் போது 2 முறை அஜித் சார் ரிகர்சல் எடுத்தாரு.. அதுக்கப்பறம் அவர் பண்ண ஆரம்பிச்சிட்டாரு.. அந்த ஷாட் ல ஒருத்தர் தப்பு பண்ணாலும் திரும்பவும் மொதல்ல இருந்து ஆரம்பிக்கனும். அந்த ஷாட் ல அஜித் சார் கூட நடிச்சது எல்லாரும் நடிகர்கள், ஸ்டண்ட் மேன் இல்லை. அதனால அந்த ஷாட் முடியவே 14 ஷாட் தேவைபட்டுச்சு.. நடுவிலே இந்த ஷாட் மாத்திக்கலாமா என்று  அஜித் சாரிடம் கேட்டோம் அவர் வேண்டாம் னு சொல்லி அந்த ஷாட்ட‌ சவால எடுத்துக்கிட்டு முழுமையா முடிச்சு கொடுத்தாரு.. 3 வது ஷாட்டிலே எங்களுக்கே ஓய்வு தேவைபட்டுச்சு .. ஆனா அவர் ஷாட் முடிச்சதுக்கப்பறம் தான் அவர் போய் உட்கார்ந்தாரு..  அதன்பின் படப்பிடிப்பு தளத்தில்  எல்லோரும் விசிலடித்து கைத்தட்டியது.” என்றனர்.

மேலும் படத்தில் ஏற்பாடு செய்த சிறப்பு காட்சிகளுக்கான பிரத்யேக சண்டை காட்சிகள் மற்றும் அதில் அஜித்தின் பங்களிப்பு குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ.  

“துணிவு திரைப்படம் எனக்கு ஒரு சவால்..” -  படம் குறித்து மஞ்சு வாரியர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..
சினிமா

“துணிவு திரைப்படம் எனக்கு ஒரு சவால்..” - படம் குறித்து மஞ்சு வாரியர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..

ஓடிடியில் ஹன்சிகாவின் திருமணம்.. ரசிகர்களுக்கு Cute Surprise.. வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

ஓடிடியில் ஹன்சிகாவின் திருமணம்.. ரசிகர்களுக்கு Cute Surprise.. வைரலாகும் வீடியோ இதோ..

“இன்னும் ஒரு வாரத்துல.. தளபதி 67 அப்டேட்..”  –  அட்டகாசமான அறிவிப்பு .. வைரலாகி வரும் வீடியோ இதோ..
சினிமா

“இன்னும் ஒரு வாரத்துல.. தளபதி 67 அப்டேட்..” – அட்டகாசமான அறிவிப்பு .. வைரலாகி வரும் வீடியோ இதோ..